Social Icons

Dienstag, 22. März 2016

(கேஜி) எழுதிய 'துளிர்' கவிதை நூல் வெளியீட்டில் தருமன் தருமகுலசிங்கம் சிறப்பு விருந்தினராக அழைப்பு



டென்மார்க்கில் வசிக்கும், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் அகில செயலாளர் நாயகமும், டென்மார்க் தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவருமான திரு.தருமன் தருமகுலசிங்கம் அவர்கள் இலங்கைக்கு செல்லவுள்ளார்.

ஏப்ரல் மாதம் 09ம் திகதி, ஈழத்தின் மலையகத்தில் இடம்பெறும் பொகவந்தலாவை கனகேஸ்வரன்(கேஜி) எழுதிய 'துளிர்' கவிதை நூல் வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவர், வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்துவார்.தொடர்ந்து வன்னிக்கும் செல்வதோடு,

 உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் சார்ந்த பணிசார் விடயங்களிலும் ஈடுபடுவார். ஈழத்துப் படைப்பாளர்கள் தமது நூல்களை டென்மார்க் தேசத்திற்கு இவரூடாக அனுப்பி வைக்க முடியும். அங்கு அவை ஆவணமாக்கப்படும். எவ்வித செலவுகளும் இல்லாமல் இப்பணி இடம்பெறும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates