மலர்களே....
இன்று உறங்கிக் கொள்ளுங்கள்
நாளை நீங்கள்
மலர்ந்தால்
மறுபடி
உறக்கமில்லை
உங்களுக்கு .....;!
மலர்ந்தவுடன்
மறுநாள்
இறந்து போகும்
மலர்களே
இன்று நல்லாய்
உறங்கிக் கொள்ளுங்கள் ...!!
அதிகாலைச்
சூரியனின் வருகையோடு
இதழ்கள் விரித்து
மலரும் நீங்கள்
உறங்க வழியில்லை மீண்டும் அதனால்
உறங்கிக் கொள்ளுங்கள் இன்று..!!
மலர்களே உறங்குங்கள்
இன்று....நாளை இறப்பதை
மறந்து உறங்குங்கள் இன்று...!!!
Keine Kommentare:
Kommentar veröffentlichen