கொடுமை
கொடூரம்
அநியாயம்
அராஜகம்
அரசியல் இவற்றினால்
இன்னல்கள்
இடர்கள்
இல்லாமை
வறுமை
அநாதை
எனும் உருவாக்கல்
இல்லாதொழிய
நாமே நமக்குள்
உருவாக்கனும்...
வல்லரசுகளின்
தந்திரோபாய
வியாபாரத்தினால்
வாழ வேண்டிய
தளிர்கள் நாம்
அழிக்கப் படுகின்றோம்
பணம் என்ற
நோக்கொன்றால்
நொந்து நூலாகின்றோம்.
வலுவற்ரோராய்
வசதியற்றோராய்
நோயாளியாய்
சொல்லொனாத்
துயரக் கடலில்
சிறுவர்கள் நாம்....
இனியும் தாங்க
மாட்டோம்.
சிந்திக்க மறுக்கும்
பெரியோரே
எமக்குத் தெரிந்த
ஒரே ஒரு வழி.
ஆயுதக்கிடங்குகளை
அழியுங்கள்.
சொல் செயலாகும்
காலத்தில் நாம்.
எங்களை உய்ய
விடுங்கள். உங்களைக்
காப்போம்.
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் தயாநிதி
Keine Kommentare:
Kommentar veröffentlichen