வெற்றுகாகிதத்தை உற்றுநோக்கி
எழுதிய வரிகளை
மீட்டுப்பார்க்கிறேன்
கருப்புமை கொண்டு எழுதவில்லை
என்பது மட்டும் புரிகிறது
ஆனாலும்
வடித்த கவிதையை யாரும்
படிக்கவில்லை
ஆர்வமில்லா ஆதங்கத்தில்
கள்ளமில்லா நெஞ்சு
கலங்கி கொஞ்சம் தடுமாறி
பதிந்துவிட்ட நினைவலைகள்
கல்வெட்டாய் உருமாறி
என் கண்ணிகளில் மட்டும்
கண்ணீர் துளிகள்
ஆக்கம் மீரா குகன் ஜெர்மனி
Keine Kommentare:
Kommentar veröffentlichen