பிறப்பு ஒன்று
இறப்பு ஒன்று
உயிர் ஒன்று
உணர்வு ஒன்று
பசி ஒன்று.......
எல்லம் ஒன்றாய்
படைத்தவன்
மனிதனை
நிறங்களால்
பிரித்தான்...
படைத்தல்
காத்தல்
அழித்தல்
அருளல்
மறைத்தல்
எனும் ஐந்தொழில்
பொறுப்பிற்கும்
அவனே நியமனம்
செய்தான்..
ஆனாலும் யாவும்
மனிதன் கரம்
மாறி குணம்
மாறி அழிவுக்கும்
மனிதனே
காரணமகின்றான்..
மறைவில்
மனிதம்
இல்லாமலும்
இல்லை...
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
Keine Kommentare:
Kommentar veröffentlichen