Social Icons

Montag, 30. Mai 2016

கவிப்புயல் இனியவன் எழுதியஒரு வழிப்போக்கனின் கவிதை


தெருவோரத்தில் உச்சி வெய்யிலில் .....
வாய்க்கு வந்தததை உளறியபடி ......
சென்ற வழிப்போக்கன் ஓரத்தில் ....
இருந்த "அரசடிப்பிள்ளையாரை"....
வாயில் வந்ததையேல்லாம் .....
தொகுத்து கவிதையாக்கினான் .....!!!


பார்க்கும் இடமெல்லாம் .....
இருக்கும் தெருவெல்லாம் ......
ஆற்றங்கரையெல்லாம் .......
வீற்றிருக்கும் பிள்ளையாரே ......
என்போன்ற வழிப்போக்கனுக்கு .....
பக்தியை அள்ளிவழங்க உம்மை ....
விட்டால் யார் உள்ளனரோ .....?

மிருகம் பாதி மனிதன் பாதி ....
கலந்திருக்கும் கடவுள் நீர் .......
அதனால் தானோ எல்லா ....
உயிரினங்களும் உம்மில் ......
இத்தனை அன்போ .....?

உம் வயிறும் நிரம்ம போவதில்லை .....
என் போன்ற வழிப்போக்கனின் .....
வயிறும் நிரம்ம போவத்தில்லை .....
பணம் படைத்தவன் வயிறும் ....
மனமும் நன்றாக நிரம்புகிறது .....
அவர்கள் பார்த்து நமக்கு ....
படைத்தால் தான் நம் வயிறு ......
நிரம்ப முடியும் ..........!!!

அதுசரி உமக்கும் புத்தனுக்கும் .....
அப்படியென்ன அரசமரத்தில் ....
காதல் - எங்கெல்லாம் அரசு 
முளைக்கிறதோ அங்கெல்லாம் ....
இருவரும் அரசை பிடிப்பதுபோல் ....
அரச மரத்தை பிடிக்கிறீர்கள் .....
அரசை பிடிப்பதில் அப்படியொரு ....
கடும் போட்டி உங்களுக்குள் .......!!!

போகிற போக்கில் அரசமரத்துக்கு ....
நீங்கள் போராட மக்களை தூண்ட ....
போகிறீர்கள் - போதுமையா....
நாங்கள் போராடிய போராட்டம் .....
நீங்கள் இருவரும் தொகுதி உடன் ...
பாட்டுக்கு வாருங்கள் ....
அரசடி பிள்ளையார் நீங்கள் ....
வடக்கு பக்கத்தையும் கிழக்கு ....
பக்கத்தையும் பார்த்து இருங்கள் ....
புத்தன் மற்ற திசைகளில் அமரட்டும் ......!!!

சற்று களைப்பாறிய வழிப்போக்கன் .....
தோள் துண்டை தலையில் போட்டபடி ....
அரசிடமிருந்து விடைபெற்றான் ....!!!


ஆக்கம் கவிப்புயல் இனியவன்


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates