அல்லி குளத்தருகே
அவன் வந்து
காத்திருப்பான்
சும்மா போய் நானும்
சுற்றலாம்
என்றிருந்தேன்
அம்மா வந்து
அடுக்களையை
பார் என்டா
உலையோ கொதிக்குது.
உள்ளம்மட்டும் தவிக்குது
கண்ஜாடை காட்டிப்போனான்
நான் எப்படி போக
சோறு தண்ணி இறங்கலையே
அச்சாரம் இடாம
அன்டையிலநோட்டமிட்டு
அவசரமா போய் வரனும்
அம்மா வருவதற்குள்
ஆயிரம் ஆசைவந்து
அலைக்கழித்து போகுதடா
ஆத்தாடி யார றிவார் !!
அடுக்களைக்கு வாய் இருந்தா
போதும் ஆத்தா போய் வா
என்றிருக்கும்...!!<
கவிக்குயில் சிவரமணி
Keine Kommentare:
Kommentar veröffentlichen