Social Icons

Samstag, 7. Mai 2016

ஜெசுதா யோவின் மலரொன்றின் மனது..

பூவாக நான் 
இலைகள் பரப்பி
செளித்து வளர்ந்து
அங்கொன்றும்
இங்கொன்றுயாய்
மொட்டாக நான் 
மோர்ந்து பார்த்து
திரும்பும் வண்டினங்கள்
மறுநாள் நானும் 
மலரானேன்...//

என்னைச்சுற்றி
எத்தனை வண்ணத்துப் பூச்சிகள் 
மகரந்தம் எடுத்தச்செல்ல.../

வண்டினங்கள்
ரீங்காரம் இட்டபடி
என் முள்ளம் தண்டுவரை
தொட்டுச் சென்றதே
தேன் உண்டு..//

இல்லாள் கூட 
அருகில் வந்து
முகர்ந்து பார்த்து
பறித்தெடுத்து
தன் குழலுக்கு அழகுசேர்த்தாளே../&

மறுநாள் வாரியெடுத்து
மிதித்துப் போட்டு
புதிதாய் ஒன்றைப் பறித்துகொண்டாள்..//

பூசகர்கள் பிச்செடுத்து
தட்டில் வைத்து
அர்ச்சனை என்னும் பெயரில்
அள்ளிப் போட்டனர்
கடவுள் மேலும் நிலத்திலுமாய்..//

என்னை அள்ளியெடுத்து
வணங்கியும் சென்றனர்
குப்பை தொட்டியில் போட்டும்
சின்றனர்...//

என் மரணம் பார்த்து
அழுவார் யாருமில்லையிங்கே...!!!?

வீராப்பாக இருந்திடவும் முடியவில்லை
பிறப்புகேட்காது
பிறந்தேன் மலராய்
மரணம் கேட்காது
பூவாகி மறுநாள் உதிர்ந்தேன்
மரணத்தில் நானும்...//

ஆக்கம் ஜெசுதா யோ


jesu

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates