குளிருக்கு விடுதலை.
மொட்டுக்கு குதூகலம்
மலருக்கு சுதந்திரம்
மனித உணர்வுக்கும்
இனிய உள்ளத்துக்கும்
இதம் சேர்க்கும்
இளவேணில்.காலம்..
மஞ்சள் வெய்யில்
மனதை வருட
மாலைக் கருக்கல்
மகுடம் சூடிக்கொள்ள
தோழியின் தொலைபேசி
அழகாய்ப் படம் பிடித்து
என்னோடு பகிர்ந்திட
கண்ணுக்குள் காட்சி..
அன்பின் ஆர்ப்பரிப்பில்
ஆழ்மான கிறுக்கல்.
கனக்கும் இதயங்கள்
கலகலப்பாகிட அனு
தினக் கவலைகள்
ஓரம் போய் விட
ஈரக் காற்று என்னோடு
கொஞ்சிட அந்த
ஆற்றங்கரையோரம்
என் எண்ண அலைகள்
விரிந்திட கவிதை மலர்ந்தது
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
Keine Kommentare:
Kommentar veröffentlichen