இறைவா! நீ...ஏன் இப்படி எங்களைக்கைவிட்டுாய்...?
உயிர்களை படைத்தவன் நீதானே...?
உன்மையின் தனித்துவம் நீ
எம்மின அழிவிலே இப்படி ஏனையா சோதனை.!
ஆண்ட நம் இனத்துக்கு ஏன்
பட்டினியும் பசியும் ...?
ஒட்டியவயிறுடன் ஒப்பாரிக்குரலும்...
பாலுக்கு அழுகிறதா வாழ்கை ? -அல்லது
கஞ்சிக்கு அழுகிறதா வாழ்கை..?
நாம் ஏன் பிறந்தோம் என்று அழுகிறதா?-அல்லது
நம்மினமன்று...முள்ளிவாய்க்காலில்
நாதியற்ற நிலையில் நசுக்கப்பட்ட
நாளான இன்நாளை என்னிஅழுகிறதா?-
எமது இனமே ஒப்பாரி வைத்து நிற்பது
உனக்கு கேட்க்கவில்லையா கடவுளே..
இந்தப்பிஞ்சுக்குழந்தையின்
குரல் கூட உனக்குக் கேட்க்கவில்லயைா...?
சம்பந்தன் அழுதபோது அன்று
உமாதேவியார் பால்கொடுதாவாம்..
பால் நீ தர வேண்டாம்
பழம் கஞ்சியாவது ஊத்து தேவி
அல்லது முள்ளிவாய்க்கால் வெடிச்சத்ததில் இருந்து
நீயும் இன்னும் மீண்டு வரவில்லையே...?
எம்மினத்தைப்போல் .....?
எமது தேச உனர்வுடன் ஆக்கம்
இந்திரன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen