வணக்கம் தேவராசா அவர்களே!
தங்களால் உருவாக்கப்பட்ட விதைகளை விதைப்போம் என்ற இறுவட்டின் முழப்பாடல்களையும் இரசித்தேன் அதில் தங்கள் இசை மிகமிக சிறப்பாகவும் தரமுள்ளதாகவும் இருப்பதைப்பார்த்து வியந்தேன் முன்பு தங்கள் இசைப்பாடலை இரசிக்கும் சந்தப்பம் கிடைக்கவில்லை இந்த இறுவெட்டை நான் வெளியிடும் நல்ல சந்கப்பத்தை எனக்களித்த உங்களுக்கும் திருவிஜயன் அவர்களுக்கம் எனது நன்றிகள்,
இப்பாடல்களை எழுதிய வாணமதியை நான் மேடையில் தான் அறிமுகமானேன் அவரின் ஆற்றல் என்னை பிரமிக்கவைத்துள்ளது அதுவும் பாடல்களை கேட்டபின் அவர் ஆற்றலின் சிறப்பு என்னை மனமகிழவைத்தது அவர் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்,
அத்தோடு இதில் பாடல்களைப்பாடிய சிறுவர்களுக்கு மிக சிறப்பாக தமது மழலை ததும்ப பாடினார்கள் பாடல் வரிகளின் உயிரோட்டத்தின் உணர்வை பாடியுள்ளார்கள் சிறப்பாக அவர்களுக்கும் வாழ்த்துக்கள்,
உங்கள் இசைக்கு ஈடாக நான்முகத்திற்காக சொல்லவில்லை உண்மையில் எமது ஈழத்தவர் இசையில் உங்களுக்கும் ஒரு இடம் உண்டு என்பது உறுதி உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்.பண்ணாகம் இணைய நிர்வாகி கிருஸ்ணமூர்த்தி
*இவ் இறுவெட்டுக்கு உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் இப் பயணத்துக்கு தொடராக ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நல்லுள்ளங்களையும் சிறுப்பிட்டி இணையம் நெஞ்சார வாழ்த்தி நிற்கின்றது.*
Keine Kommentare:
Kommentar veröffentlichen