உங்களின் சுவாசம்
இந்தப் பூங்காற்றில் தானே.....
மண்ணின் கூறுகள்
மணமற்று அங்கே
மாறாய் உங்களின்
குருதிக் கலங்களும்
கண்ணீரின் உப்பும் தான்
கலந்து கிடக்கிறது..........
ஏகோபித்த
அவலக் குரல்களும்
இந்தப் பிரபஞ்சத்தின்
புதிய நாதமாய்
எங்கள் நினைவுகளில்
என்றும் ஒலிக்கின்றன ......
தேச உணர்வுடன்
சுபாரஞ்சன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen