தமிழர் வலிகளைச்
சுமந்த மாதம்..
வன்முறைகளால்
தமிழன் அழிந்த மாதம்.
கண்ணீரும் சென்னீரும்
கரை புரண்டோடிய
ரணங்களின் மாதமும்..
இந்த மே மாதம்...
வன்முறையின்
கட்டளைப் பீடம்
தென் இலங்கையிலே
களனி க,ங்கையின்
கட்டவிழ்ந்த ஆட்டம்.
இயற்கை அனர்த்தமா
இறைவன் ஆட்டமா..!
உயிர் வலியின்
உக்கிரம் அறிந்தவர்கள்
உயிரின் உன்னதம்
இடப்பெயர்வின்
பேரவலம் இன்று
யாவும் மரத்துப் போன
இனமானபோதும்
எதிரிக்கும் இன் நிலை
வேண்டாம் என
துடிக்கின்றது இதயம்..
இயற்கை அன்னையே
அடங்கிப் போ
அல்லறும் மக்களுக்கு
அமைதியைக் கொடு.
பாதிக்கப் பட்ட
மக்களுக்காய்
மனம் இரங்கி
மன்றாடுவோமாக...!
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் தயாநிதி
Keine Kommentare:
Kommentar veröffentlichen