Social Icons

Dienstag, 3. Mai 2016

பிரித்தானியாவில் இடம்பெற்ற “உலகத் தமிழர் வரலாற்று மைய வளாக புகுவிழா”


உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாக புகுவிழா நிகழவுகள்  கடந்த 01/05/2016 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திரு. இன்பன்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தாயாரான  திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம்,,  தமிழகத்தின் பிரபல பாடகர் திரு. டி எல் மகாராஜன், நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அவை உறுப்பினரும் இரண்டு மாவீரர்களின் சகோதரனுமாகிய திரு.திருக்குமரன்,  கடற்கரும்புலி மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும்  மாவீரர் சிரித்திரனின் சகோதரர் திரு. ஒப்பிலான் ஆகியோர் பொதுச்சுடர்களினை  ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.WTHS_OPENDAY_3777


அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய கொடியினை பிரித்தானிய காவல்துறையை சேர்ந்த  திரு. சுரேஷ் அவர்களும். தமிழீழ தேசியக் கொடியினை திரு சாம்ராஜ் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து பொதுத்தூபிக்கான  மலர் மாலையினை திருமதி பிரிகேடியர்  சசிக்குமார்  டிலானி அவர்கள் அணிவித்தார்.WTHS_OPENDAY_3885

அதனைத் தொடர்ந்து முதல் மாவீரர் லெப்டினன்ட் சத்தியநாதன் சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அவரது தந்தை ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார். முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் திருவுருவபடத்திற்கு திருமதி  பிரிக்கேடியர்  கடாபி சுதா  அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார்.

ஈகைச்சுடர் தியாகி முத்துக்குமார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு திரு. கபிலன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவிக்க,  நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு திருமதி சுகிந்திரா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார்.WTHS_OPENDAY_3879


பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டு அனைத்து மக்களும் மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கும்,நினைவுக்கற்களுக்கும், பொதுத் தூபிக்கும் ஈகைச்க்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

மலர் வணக்கத்தை தொடர்ந்து தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய  அத்தியாயத்தை   பதிவு செய்த  உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் பெயர்ப்பலகைத் திரைநீக்கத்தினை எமது எதிர்கால சிற்பிகளான சிறார்கள்  வைபவ ரீதியாக  திரை நீக்கம் செய்துவைத்தனர்.

பெருந்திரளான பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய மக்கள்   கலந்துகொண்டு சிறப்பித்த இந்த நிகழ்வில், அரங்க  நிகழ்வுகளாக.  வரவேற்பு நடனத்தினை செல்வி ஆர்த்தி அவர்களும் செல்வன் மிதுரன் அவர்களும்  வழங்க   வாழ்த்துரையினை இந்தநிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து சிறப்பித்த பிரபல தமிழக பாடகர் மதிப்பிற்குரிய  திரு.  ரி.  எல். மகாராஜன் அவர்கள் வழங்கினார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates