எதனால்
தொடங்கியது
இந்த நச்சரிப்பு..?
நாட்களை
விழுங்கிய
நேரத்திலா..?
நேரங்களை
விழுங்கிய
நிழல்களிலா..?
கருகிய
கட்டுடலில்
வெண்பஞ்சை
திணித்தது
யார்..?
இருப்பதை
உறுதி செய்து
நிர்வாண படம்
வரையவா..?
இல்லை..
பூக்களையும்
இலைகளையும்
கொய்துவிட்டு
கொலைக்களம்
ஏறவா..?
ஓ...ஓ..
சுடு வெயிலே...
நகக்கண்ணில்
ஊற்றுக்கள்
பாய்கிறதே...
மயிர்நுனியால்
மறுதலிப்பும்
கசிகிறதே...
எதற்கான
நச்சரிப்பு இது
இருத்தலுக்கா...?
இறத்தலுக்கா...?
ஆக்கம் நெடுந்தீவு தனு
Keine Kommentare:
Kommentar veröffentlichen