முட்கம்பிகளில்
தலையணையை
அணைத்தபடி
நலம் விசாரிக்கிறாள்
தமிழ்நிலா...
நான் தவண்ட நிலமே
நான் குளித்த கடலே
நான் ஒளிந்த வயலே
நான் மிதித்த வரம்பே
நலமா..?
மீளா துயர் சுமந்து
ஆறாக் காயங்களோடும்
அன்னை தந்த
அன்பு முத்தங்களோடும்
செல்கிறேன்...
அண்ணண் தந்த
அசையா உறுதியோடும்
தம்பி காத்த
அரண்களை தாண்டிம்
செல்கிறேன்...
வீரர்கள் நடந்த
மண்ணை அணைத்தும்
எதிரிகள் முன்
புயலாய் வெடித்தும்
போகின்றேன்...
ஓ என் தேசமே..!
பற்றி எரியும்
உயிருள்ள மரங்களே...!
ஓடிவரும்
என் சக
உறவுகளே..!
நான்
போகின்றேன்...
நான் மட்டும்
தனியாக போகின்றேன்...
முட்கம்பி
விலக்கப்பட்டு
கண்மூடி கட்டப்பட்டு
அடைக்கப்பட்ட ஊர்தியில்
நான் போகிறேன்...
Keine Kommentare:
Kommentar veröffentlichen