காலங்கள் மாறலாம்
காட்சிகள் கூட மாறலாம்
கடந்து வந்த பாதையை
மறப்பது ஞாயமா,.?
பாசங்கள் மாறலாம்
வேஷங்கள் போடலாம்
செய்நன்றி மறத்தல்
உன்னை நீ மறந்ததற்கு சமனல்லவா...?
உன்னை நம்பியோர்க்கு
நல்லது செய்ய வேண்டாம்
தீங்காவது செய்யாதிரு
அதுவே உனக்கு சிறப்பல்லவா...//
பொய்கள் பேசி
போலிமுகம் காட்டி
அன்பென்னும் மாய வலையில்
மனதைதிருடுதல் கூட
உன் பாவத்தின் ஒரு பாதியே...//
காரணம் ஆயிரம்
கற்பிக்க நினைக்காதே
உன்னை நம்பியவர்களை
நடுத்தெருவில் நிறுத்தாதே..//
பாவத்தின் இருப்பிடம்
பிறர் கண்ணீரின் உறைவிடமாய்
நாளை நீ இருக்காதே...//
நல்லதை நினை
நல்லதை செய்
நாளை உன் வழித்தோன்றலும்
வாழும் சிறப்பாகவே...//
Keine Kommentare:
Kommentar veröffentlichen