முள்ளிவாய்க்கால் 2009
_________________________________
கண்கள் நெருப்பாகிறது
அடிவயிறு பற்றி எரிகிறது
காதுகளில் ஓலங்களின்
எதிரொலி தீயாகிறது
முள்ளிவாய்க்கால் எனும்
நாமத்தை நினைவு கொள்ள
நடந்தேறியது கனவா
தூக்கம் கலையவில்லையா
ஓ கடவுளே!
கனவில்லையே நிஜமே
என் உடல் வலிகிறது
என் அடிவயிற்றையும்
ஓட்டை போட்டு
சென்றுள்ளது
பீரங்கிகளின் ஓர் துண்டு
கூட வந்தவர்கள்
என் காலடியில்
உயிரற்ற உடலாக
இரத்த வெள்ளத்தில்
மிதந்து கிடக்கின்றனர்.
அதில் போராளிகள் யார்
அப்பாவி மக்கள் யார்
இரத்தம் சதையல்லவா
கிடக்கிறது
ஏய்! சிங்கள கொடு இனமே
மிருகங்களை விட
கொடூரமாக அல்லவா
வேட்டை ஆடியுள்ளீர்
பிறக்க எதிர்பார்த்த குழந்தை
பிறந்த மழலையர் என்ன பாவம்டா
செய்தனர்???
பெண்டுகள் வயிறு கிழித்தாய்
கன்னியர் கற்பெடுத்தாய்
ஆடவர் உதிரம் குடித்தாய்
மாண்டு போனது
மனிதன் மட்டுமல்லவே
என் இனமும் தானே!
தெலுங்கு தேசத்து கழுகு
கூட்டமே
எங்கள் மண்
எங்கள் உரிமை
அதை பறிக்க
நீயாரடா?
ஆண்டுகள் ஆகலாம்
எல்லா தடங்கள் மாறலாம்
நாங்கள் மறவோம்
இக்கொடுமைதனை
வஞ்சம் தீர்ப்போமடா
இ(கி)ந்திய தேசத்தின் பிச்சை,
சீனக்காரனின் எச்சில்,
எல்லாக்கழிவுகளையும்
எம்மீது கொட்டி
எங்கள் உயிர் குடித்தாய் அல்லவா
நாங்கள் காட்டுகிறோம்
முள்ளிவாய்க்கால் போல்
ஒரு தேசத்தை விரைவில்.....!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் 18.05.2015
ஆறாம் ஆண்டு நினைவாக களத்தில் உயிர் நீத்த போராளிகள் அப்பாவி பொதுமக்கள் நினைவாக அவர்களுக்கு சமர்ப்பணம்
ஆக்கம் பவித்ரா நந்தகுமார்
Keine Kommentare:
Kommentar veröffentlichen