எனக்காக சந்தோஷபட முடியாத உனக்காக
என் சந்தோஷத்தை இழப்பதில் இனி பலனில்லை
எனக்காக பெருமைபட நினைக்காத உனக்காக
என் பெருமையை விட்டுக் கொடுப்பதில் நியாயமில்லை
என்னிடம் துளிர் விடும் திறமையை தட்டிக்கொடுக்க இயலாத உனக்காக
என் திறமையை மழுங்கடிப்பதில் இலாபமில்லை
என்னிடமிருந்த நம்பிக்கையை பறித்து இருளில் விட்ட பின்னும்
எங்கோ தொலைவில் சுடர் விடும் வெளிச்சத்தை அணைப்பது சரியில்லை
உனக்காக வாழ்ந்த நாட்கள் இனி போதும் போதும்
எனக்காகவேனும் நான் இனி வாழ வேண்டும்
நீதி நியாயம் என் பக்கம் இருக்கையில்
நிச்சயம் ஒரு நாள் நானும் நானாக வாழ்வேன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen