காட்சிகள் மாறுகின்றன
ஆட்சிகள் மாறுகின்றன
ஆனாலும் மாறாத காயம் ஒன்று தான்
அது முள்ளிவாய்க்கால் சோகம் மட்டும் தான்
கோரத்தின் காட்சியும் அதுவே
கொடுங்கோலின் ஆட்சியும் அதுவே
அதர்மத்தின் சாட்சியும் அதுவே, அய்யோ,
பரிதாபத்தின் காட்சியும் அதுவே
பட்ட துயருக்கு நீதி வேண்டும்
பலி கொடுத்த உயிருக்கு நியாயம் வேண்டும்
இழந்த இழப்புகளுக்கு நீதி வேண்டும்
நாம் தலை நிமிர்ந்து வாழ வழி வேண்டும்
நம் செல்வங்கள் வாழ வேண்டும்
நம்பிக்கையுடனே ஒன்று சேர வேண்டும்
நம் வாழ்வில் விடிவொன்று உருவாக வேண்டும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen