காளான்களில்
அப்பிக்கொள்ளும்
மரக்கீழ் திசுவாக
நான்...
முன்பு
முனிவனாக
கனவு கண்டவன்...
பிரளயங்களை
எடுத்தெறிந்து
உணர்வை
பிரித்துப் பார்த்தவன்...
இலைச்சுருட்டி
புழுவாக
மரவுச்சியில்
ஊஞ்சலாடியவன்...
நிலக்கீழ்
வேர்தேடி
நித்தம் நடந்த
நாடோடி....
பிராந்துகளின்
கண்களில்
பிம்பங்கள் சேகரித்த
பொருள் விரும்பி...
எழுத்துக்களை
கோர்த்தெடுக்க
நிலவில் முகம் புதைத்த
கவிதைக்காரன்...
ஆழ்நிலை
தியானமொன்றில்
முன்நின்ற
யாசகன்...
விடையில்லா
வினா தேடும்
முதிர்ச்சி நிலை
கண்டுபிடிப்பாளன்...
பிரபஞ்ச நீரோட்டத்தின்
நிகழ்வுகளை
அனுமானித்தபடி
மரித்துக் கொண்டிருக்கின்றேன்...
உயிர் ஊரும்
வரைபடத்தில்
திசுக்களை சுமந்தபடி
காளான் கருகிட....
காளான்களின்
விம்மல்களில்
கருகி கொள்கிறது
"நான்" என்ற மமதை..
.ஆக்கம் நெடுந்தீவு தனு
Keine Kommentare:
Kommentar veröffentlichen