Social Icons

Sonntag, 8. Mai 2016

மஞ்சு மோகனின் நினைத்திட வேண்டும் உம்மையே...


எம்மொழித்தாயே ஏனிந்த வலியுனக்கு?

உம்வலிபோக்க நின்றாரே காவலுக்கு!
எந்த புலர்வும் இல்லாமல் போனதற்கு,
எம் தாய்க்கு மட்டும் மீதியாய் வலியெதற்கு?

இனவெறி பிடித்த வெறியர்கள் தின்ற,

இளங்கன்றுகளை ஈன்றவளும் தாய்தான், 
மண்ணில் விதையாகி மரணம் வென்ற,
மாவீரமணிகளை சுமந்தவளும் தாய்தான்.

நெற்றியில் வீரதிலகமிட்டு போராளியாய்,

நித்தமும் தேசப்பணி எம்தாய் சுமந்தாள்,
வீரமகளால் அன்றுவீறு நடைபோட்டாள்,
வீணர்களால் இங்கே கைவிடப்பட்டாள்.

இதயம் வெடிக்க இரும்புச் சிறைக்குள் ஒருவன்,

உயிரும் துடிக்க மண்ணாய் போனான் 
மறவன்,
பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் தவிக்கும்,
எம்தாயவள் துயர்தான் யாரறிவார் ஐயோ!

அங்கே இங்கே கடன் வாங்கியவள்,

ஆருயிர் மகன் உயிர் காத்திடத்தான்.
அலைகடல் தாண்டவும் செய்தாளவள்,
அணைக்க வழியின்றி தவித்திடத்தானா?

அடுப்படியில் பல்சுவையுணவு ஆக்கி,

அவனை எண்ணி இங்கிருந்தே ஏங்கி, வருவானோ? என்று எதிர்பார்த்து உருகி,
வாசலில் தினமும் அவனுருவம் தேடி...

விழுப்புண்ணேற்று இங்கே மூலையில்,

அழுங்காமல் கிடக்குறானவன் ஓலையில்,
பெற்றவளே பெற்றவனைச் சுமக்கும்,
பேரவலமும் எம்தாய்க்கு யார்தந்தார்?

நிகரற்ற நிதர்சனங்களாய் எம்தாய்கள்.

நித்தமும் நினைத்திடவே மறவாதீர்கள்.
நிர்க்கதியாகி அவர்கள் போய்விட்டால்,
நெடுந்துயரெம்மை பின் தொடர்ந்திடுமே!

மஞ்சு மோகன் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates