வாழ்ந்துபார் தெரியும்மா
இறப்பும் பிறப்பும் உன்கையிலா
இருந்தால் சொல்லு தாராளமா
வாழ்க்கை என்பது ஒருமுறை
வளமும் வாய்ப்பும் உன்னிடமே
தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீர்ந்து தெளிந்தால் வாழ்க்கை வரம்மா
வாழத்தெரியா வாழ்க்கை வாழ்ந்து
வாழும் வகை அறியா நொந்து
ஏட்டியும் போட்டியும் ஏளனமுமிருந்தால்
ஏது சொல்ல வாழ்க்கை பாரம்மம்மா
அன்பிலே அத்திவாரமிட்டு
அகத்தூய்மை கொலுவேற்றி
நெஞ்சிலே நேசம் கொண்டால்
நேர்த்திதரும் வாழ்க்கை வரமம்மா
கண்டதே காட்சி கொண்டதே கோலம்
கையிருப்பு உள்ளவரை உல்லாசம்
கால் காசு இல்லாவிடில் திண்டாட்டம்
கட்டாயம் இதனால் வாழ்க்கை பாரமம்மா
எள்ளானாலும் ஏழாய்ப்பகிர்ந்து
எட்டா உறவு,ம் கிட்ட இழுத்து
விட்டுக்கொடுத்து வாழ்வதானால்
வாழ்க்கை உனக்கு வரமம்மா
தன்னையறியா தேவாங்குபோல
தன்னிலையறியா வாழ்க்கை வாழ்தல்
தகுதிக்குமேல ஆசைவைத்தல்
தருவது வாழ்க்கை பாரமம்மா
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
கொடுத்துக்கெட்டார் எங்கும் இல்லை
பக்குவம் உள்ள மனம் இருந்தால்
பாத்திரமான வாழ்க்கை வரம்மமா
நேற்று வந்தது முடிந்தது
இன்று நடப்பது கடப்பது
நாளை என்பது நம்கையில
Keine Kommentare:
Kommentar veröffentlichen