நீண்டநாட்களின் பின் மத்தியான வெய்யில் மண்டையைப்பிளக்க மன்னார்வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்தபோது தாகமாக இருந்தது. ஒரு சோடாகுடித்தால் சூடு குறையுமென்று ஒரு கடைக்குள் ஒதுங்கினேன் .. என்ன ஆச்சரியம்..! பல வருடங்களாக சந்திக்காத , இருக்கிறானோ ..?இல்லை .இறந்திட்டானோ ..?என நான் நினைத்த பழைய கிளிநொச்சி நண்பன் . அதிர்ச்சியோடு ஆனந்தமும் ஒட்டிக்கொண்டது.
அந்தக் கடையே அவனுடையது என்றான். நலம் விசாரித்து மகிழ்ந்தான். அவனது தந்தையும் தாயும் மருத்துவர்கள். இவனும் என்னோடு விஞ்ஞானப்பிரிவில் உயர்தரத்தில் கற்றவன் சிறிது காலம் . நல்ல கெட்டிக்காரன். நீண்டநேரம் உரையாடினோம். அப்போது கேட்டேன் "ஏன் நண்பா இந்த வியாபாரத்தை தேர்ந்தெடுத்தாய் தொடர்ந்து படித்திருக்கலாமே என்று.." சிரித்தபடி பதில் தந்தான் .. "நான் வாழ்க்கையைப் படிக்கிறேனடா , அறிவுக்கு போதுமான ஏட்டுக்கல்வி எனக்கிருக்கிறது" என்றபடி சொன்னான் "கலியுகமடா இது ,போலிகளின் போகம் என்றான் . தனது அனுபவங்கள், வலிகள், தோல்விகள் ,சரிவுகள் எல்லாவற்றையும் விரத்தியை திறந்து சிரித்தபடி சொன்னான்.
அவனின் கருத்துக்கள் அத்தனையும் அர்த்தமுள்ள வடிவங்கள் . ஆணியாய் ஏறியது மனதில் . என்னையும் ஒப்பீடு செய்தேன் . உறவுகளையும் ஒப்பீடு செய்தேன். முகநூல் கூட மனத்திரையில் ஓடியது . இதில் எத்தனையாயிரம் நட்புக்களைச் சேர்த்தாலும் எத்தனை நட்புகள் உண்மையான உறவுகள் ..? என்ற வினாவும் எழுந்தது .
அவன் சொன்னது போல எனக்காக வாழ்வோம், என்னை மதிக்கின்ற விசுவாசமான பாசமான உறவுகளுக்காக மட்டும் வாழவேண்டுமென எண்ணிக்கொண்டேன் . அதனால் நட்பிலுள்ள இலக்கியப்போலிகளையும் , போலி நட்புகள் பலரையும் நட்பு வட்டத்திலிருந்து நீக்கவுள்ளேன். இனியவது உண்மையான உறவுகளோடு நகரட்டும் நாட்கள்
உன்மையில் உரசல் கண்ட வன்னியூர் செந்தூரன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen