Social Icons

Sonntag, 10. April 2016

சுதர்சன் எழுதிய வலியோடு வதைமுறை














உலர்ந்த சருகுகளுக்கு
ஈரமாக மரத்தடியில்
நனைந்து கிடக்கிறேன்
மரணத்தின் தருவாயில்
என்றோ ஒரு நாள்
புதைக்கப்பட்டோ
எரிக்கப்பட்டோ
மண்ணிற்கு உரமாக்கப்படுவேன்
வேடம் தாங்கல்
வாழ்வில்
பல வேடங்களையிட்டு
சலித்து போய்
உன்னிடம்
தஞ்சம் கொண்டேன்
நீயும் காய்ந்த
சருகுகளை இட்டு
எனை மண்ணோடு
புதைத்து விட முனைகிறாயே
உனை சொல்லியும்
தவறில்லை
உனை போல நானும்
வாழ்ந்து கெட்டவனே
அவயங்களும் சோர்வாகி
உணர்வுகளும் சோர்வாகி
உடல் வேறு
தோல் வேறாக தள்ளாடுகிறேன்
வாழ்வின் அர்த்தம் தேடி
அலைகின்ற போதினில்
கிடைத்து விடவில்லை
தடுக்கி விழும் போது
கிடைக்கிறது
அர்த்தம் எனக்குள்ளேதான்
என்று
உடலில் பட்ட
வடுக்களும்
மறைகிறது
ஆனாலும் வலிக்கிறது
புகையிலை குடித்த
சிறு நீரகம் போல்
மனம் எனும்
பஞ்சில்
குத்தப்பட்ட ஊசிகள்
புடுங்க முடியாத
காரணத்தால்

ஆக்கம் சுதர்சன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates