பொய்மையின் விதையில்
நிறம் மாறும் பூச்செடிகள்
நீரூற்றி செடி வளர்த்த
விலையில்லா
வினை மரங்கள்
பலகிளைகள் கிளைத்தாலும்
விழுதுகளாய் நெளிந்தாலும்
பசுமை போர்வையில்
பச்சோந்தியாய்
நிறம் மாறி
வேர் இல்லாமல்
தடம் நடுங்கி
வாய்மையின் முன்னே
மண்டியிட்டு தடுமாறி
நாள் முடிவில்
மரணிக்கும்
நிஜம் என்றுரைத்த
பொய்மை செடிகள்
ஆக்கம் மீரா குகன் ஜெர்மனி
Keine Kommentare:
Kommentar veröffentlichen