ஏப்ரல் 15, 2016 இன்று தேசியத் தலைவரால் மதிக்கப்பட்டவருள் ஒருவரான “மாமனிதர்” கவிஞர், கலைஞர் நாவண்ணன் அவர்களது நினைவு நாள். வீர வணக்கம் செலுத்துவோம்.
சில கவிஞர்கள் வெறும் ஏட்டுக் கவிஞர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் வாழ்வு என வருகையில் தாமும் தமது குடும்பமும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மற்றவர்கள் போராட
வேண்டும் என நினைப்பார்கள்.
அப்படிப்பட்டவர் மத்தியில் தான் மட்டுமன்றி தனது அருந்தவ புதல்வனையும் மண்ணிற்கே ஈகம் செய்தவர் கவிஞர் நாவண்ணன் அவர்கள். பல மாவீரர் பாடல்களை எழுதி எமக்காக உணர்வு ஏந்தித் தந்தவர் கவிஞர்.
மாமனிதர் நாவண்ணன் அவர்களின் புதல்வன் லெப்.கவியழகன்(சூசைநாயகம் கிங்சிலி உதயன்)16-05-1997 அன்று வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்தார்
Keine Kommentare:
Kommentar veröffentlichen