என் மகனே…!
என் மடியில் நீ உறங்கும்
இன்றைய அழகான பொழுதினில்
நீ நலமா கேட்கத் தோன்றும்
எண்ணங்கள் செத்து கிடக்கிறது
என் உதடுகளுக்கு வலிமை இல்லை
நீ கால் பதித்து நடந்த போதெல்லாம்
வலிக்காத என் உடலை கிழித்து
என்னுள் தூங்கும் போது வலிக்குதுடா
நீ நின்மதியாய் தூங்குகிறாய்
உன் தாய் இங்கே வேதனையால்
துடிக்கிறேன்
வஞ்சகம் உச்சமேறி
உன் தாய் மடி வலியால் கனக்கறது
அறியாமல் நீ கண்மூடி கிடக்கிறாய்
கீதா உன் எழில் முகம்
என்னுள் ஏன் சோபையற்று கிடக்கிறது?
களமுனை எம் மினத்தை சாய்க்க
தேடி உன் வீடு வந்த போது
வீட்டை துறந்து கயவனை தேடி
எனை காக்க சென்றவன் நீ…
காய்ந்து கிடந்த என் உடலை
பச்சையம் கொள்ள வரித்த
வானவிலாய் விடியல் தேடி
சென்ற வரிப்புலி மகன் நீ
என் மார்புகளை பிளந்து ஏன்
உறங்குகிறாய்
உனை பெற்ற தாய் விழி
அழுகிறதே தினமும்
அவள் கண்ணீரில்
நான் நனைவதை மறந்து
நீ எங்கனம் உறங்குகிறாய்
நீ நிறமிழந்து போனாயா?
உன் பூந்தளிர் புன்னகைக்கு
பூமலை சூடவா?
நீ வரித்த வரலாற்றுக்கு
பாமாலை சூடவா? நீ
கொண்ட கொள்கை தொட்டு
இலக்கடைய வீர முறுக்கோடு
வரிசையில் நின்றார் உன் தோழர்
இன்று நீ உறங்கியது கண்டு
மௌனித்து கிடக்கிறார்
விழி சொரிந்து அவர் துடிக்க
ஏன் மகனே என் மடிக்கு
நீ வந்தாய்?
பகலிரவின் சுழர்ச்சியிலும்
என் விடுதலையை வேண்டி நிமிர்ந்தவனே
நீ உண்ட சோற்றை உடல்
உணர முன்னே
குருதி உன்னை தின்று கொன்றதோ?
கீத இசை நாதமாக
ஊரெல்லாம் ஒலித்தவனே
கல்விக் கடல் முகிழ்ந்தெழுந்த
ஆசானாய் உலகம் அறிந்தவனே
உயிர் கொடுக்க நஞ்சணிந்து
ஈழ முத்து சேர்த்தவனே
நீ சாய்ந்து போனதேனோ?
ஆண்டுகள் ஏழாய் நீ
என் மடிக்குள் சுருண்டு கிடந்து
அழுவதை யார் அறிவர்?
நீ இறந்தாதாய் சொல்கிறார்
நான் மட்டும் அறிவேன்
நீ இப்போதும் துடித்துக் கொண்டே இருக்கிறாய்
உன் குருதி என்னுள் அடங்காது
துடித்து கொண்டே இருக்கிறது
அவர் உணர மாட்டார்
உன் துடிப்பை நீ உறங்கும்
தாய் மண்ணின் மடி நான் அறிவேன்
வண்ணங்கள் சுமந்து வரும்
தமிழீழ வானவிலின் ஒளியில்
நீ ஈழ விடியலாய் மறைந்திருப்பதை
யார் அறிவர்?
கீழ் வான சிவப்பின் நிறத்தில்
உன் குருதியின் கலப்பை
யார் அறிவர்?
நீ உறங்கி கிடக்கிறாய்
உன் தாய் மடி உன் வரவுக்காய்
ஏங்குவது புரியாது
நீ நின்மதியற்று தூங்குகிறாய்
எழடா மகனே
என் மேனி மிதித்து என்னை தீண்டும்
வஞ்சகர் கதையை சிதைத்து
நில்லடா என் அன்பே…
அழுது வாழ்வது வாழ்க்கை
எனில் என் மேனியில் பட்ட காயங்கள்
மாறாத ரணங்கள் எனில்
தமிழீழ மண்ணுக்காய் உனக்கேன்
இந்த மரணம்?
எழுந்து வந்து நிமிர்வை காட்டு
வழிகள் காட்டி உன் தாயை மீட்டு
தமிழன் வாழ்வை நீ நிலை நாட்டு
எழடா மகனே
மீண்டும் புலியாய் என் மண் எனும்
கல்லறை விட்டு…
ஆக்கம் இரத்தினம்கவிமகன்
என் மடியில் நீ உறங்கும்
இன்றைய அழகான பொழுதினில்
நீ நலமா கேட்கத் தோன்றும்
எண்ணங்கள் செத்து கிடக்கிறது
என் உதடுகளுக்கு வலிமை இல்லை
நீ கால் பதித்து நடந்த போதெல்லாம்
வலிக்காத என் உடலை கிழித்து
என்னுள் தூங்கும் போது வலிக்குதுடா
நீ நின்மதியாய் தூங்குகிறாய்
உன் தாய் இங்கே வேதனையால்
துடிக்கிறேன்
வஞ்சகம் உச்சமேறி
உன் தாய் மடி வலியால் கனக்கறது
அறியாமல் நீ கண்மூடி கிடக்கிறாய்
கீதா உன் எழில் முகம்
என்னுள் ஏன் சோபையற்று கிடக்கிறது?
களமுனை எம் மினத்தை சாய்க்க
தேடி உன் வீடு வந்த போது
வீட்டை துறந்து கயவனை தேடி
எனை காக்க சென்றவன் நீ…
காய்ந்து கிடந்த என் உடலை
பச்சையம் கொள்ள வரித்த
வானவிலாய் விடியல் தேடி
சென்ற வரிப்புலி மகன் நீ
என் மார்புகளை பிளந்து ஏன்
உறங்குகிறாய்
உனை பெற்ற தாய் விழி
அழுகிறதே தினமும்
அவள் கண்ணீரில்
நான் நனைவதை மறந்து
நீ எங்கனம் உறங்குகிறாய்
நீ நிறமிழந்து போனாயா?
உன் பூந்தளிர் புன்னகைக்கு
பூமலை சூடவா?
நீ வரித்த வரலாற்றுக்கு
பாமாலை சூடவா? நீ
கொண்ட கொள்கை தொட்டு
இலக்கடைய வீர முறுக்கோடு
வரிசையில் நின்றார் உன் தோழர்
இன்று நீ உறங்கியது கண்டு
மௌனித்து கிடக்கிறார்
விழி சொரிந்து அவர் துடிக்க
ஏன் மகனே என் மடிக்கு
நீ வந்தாய்?
பகலிரவின் சுழர்ச்சியிலும்
என் விடுதலையை வேண்டி நிமிர்ந்தவனே
நீ உண்ட சோற்றை உடல்
உணர முன்னே
குருதி உன்னை தின்று கொன்றதோ?
கீத இசை நாதமாக
ஊரெல்லாம் ஒலித்தவனே
கல்விக் கடல் முகிழ்ந்தெழுந்த
ஆசானாய் உலகம் அறிந்தவனே
உயிர் கொடுக்க நஞ்சணிந்து
ஈழ முத்து சேர்த்தவனே
நீ சாய்ந்து போனதேனோ?
ஆண்டுகள் ஏழாய் நீ
என் மடிக்குள் சுருண்டு கிடந்து
அழுவதை யார் அறிவர்?
நீ இறந்தாதாய் சொல்கிறார்
நான் மட்டும் அறிவேன்
நீ இப்போதும் துடித்துக் கொண்டே இருக்கிறாய்
உன் குருதி என்னுள் அடங்காது
துடித்து கொண்டே இருக்கிறது
அவர் உணர மாட்டார்
உன் துடிப்பை நீ உறங்கும்
தாய் மண்ணின் மடி நான் அறிவேன்
வண்ணங்கள் சுமந்து வரும்
தமிழீழ வானவிலின் ஒளியில்
நீ ஈழ விடியலாய் மறைந்திருப்பதை
யார் அறிவர்?
கீழ் வான சிவப்பின் நிறத்தில்
உன் குருதியின் கலப்பை
யார் அறிவர்?
நீ உறங்கி கிடக்கிறாய்
உன் தாய் மடி உன் வரவுக்காய்
ஏங்குவது புரியாது
நீ நின்மதியற்று தூங்குகிறாய்
எழடா மகனே
என் மேனி மிதித்து என்னை தீண்டும்
வஞ்சகர் கதையை சிதைத்து
நில்லடா என் அன்பே…
அழுது வாழ்வது வாழ்க்கை
எனில் என் மேனியில் பட்ட காயங்கள்
மாறாத ரணங்கள் எனில்
தமிழீழ மண்ணுக்காய் உனக்கேன்
இந்த மரணம்?
எழுந்து வந்து நிமிர்வை காட்டு
வழிகள் காட்டி உன் தாயை மீட்டு
தமிழன் வாழ்வை நீ நிலை நாட்டு
எழடா மகனே
மீண்டும் புலியாய் என் மண் எனும்
கல்லறை விட்டு…
ஆக்கம் இரத்தினம்கவிமகன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen