பாரெங்கும் மணம் பரப்ப வந்த சித்திரையே!
பட்டொளி வீசி பர்ணமிக்கும் கோல அழகே!
சித்திரையாய் பெயர் பொறித்த நித்திலமே!
சிறப்பான திங்களாய் வலம் வருவாயோ?
எத்தனை நாள் காத்திருந்த சித்திரையே!
இத்திரையில் பட்ட இடர் களைவாயோ?
முத்திரையாய் முழுமதி பரப்பும் நீ
முகிழ்த்து ஒரு முனைப்பு உருவாக்குவாயோ?
இத்திரையில் பட்ட இடர் களைவாயோ?
முத்திரையாய் முழுமதி பரப்பும் நீ
முகிழ்த்து ஒரு முனைப்பு உருவாக்குவாயோ?
எத்தனை நாள் காத்திருப்பு தீர்வுக்கு
எப்போதும் வருவதுபோல் வருகிறாய்
எம்தமிழர் வாழ்வுக்காய் நல்லதொரு தீர்வு
எடுத்து நீயும் எழிலோடு வருவாயோ?
எப்போதும் வருவதுபோல் வருகிறாய்
எம்தமிழர் வாழ்வுக்காய் நல்லதொரு தீர்வு
எடுத்து நீயும் எழிலோடு வருவாயோ?
ஓ! சித்திரையே! முத்திரையாய் முழுமதிபடைத்தவளே!
பத்தரை மாற்று தங்கம்போல் பாரிலே நீ
பட்டதுயர் நீக்கி புத்துணர்வு தந்து
பாரெல்லாம் செழித்து பசுமை ஆக்க வாராயோ?
பத்தரை மாற்று தங்கம்போல் பாரிலே நீ
பட்டதுயர் நீக்கி புத்துணர்வு தந்து
பாரெல்லாம் செழித்து பசுமை ஆக்க வாராயோ?
ஆக்கம் கவிஞை நகுலா சிவநாதனின்
Keine Kommentare:
Kommentar veröffentlichen