வான், கடலைப் புரிந்ததால் மழை நீரானது. மண், வித்தை புரிந்ததால் விளைச்சலானது. கதிரவன், ஒளியைப் புரிந்ததால் பசுமையானது. இருள்,நிலவைப் புரிந்ததால் பௌர்ணமியானது. நான், உன்னைப் புரிந்ததால் உனக்கேயானேன். நீ, என்னைப் புரிந்தால் நாமாய் ஆனோம். உண்மை, வாய்மை புரிந்ததால் சத்தியமானது. நியாயம், நேர்மை புரிந்ததால் நீதியுமானது. கடவுள், நம்பிக்கை புரிந்ததால் சமயமானது. சாத்திரங்கள், பொய்கள் புரிந்ததால் சாதியானது. அரசன், நல்லாட்சி புரிந்ததால் சமாதானமானது. மக்கள் உழைப்பைப் புரிந்ததால் வளமாயானது. வாழ்வு நம்பிக்கை புரிந்ததால் வெற்றியுமானது. கோபம் பொறுமை புரிந்ததால் நிதானமானது. அழகு அன்பைப் புரிந்ததால் பெருமையானது. அறிவு பணிவைப் புரிந்ததால் பண்பாயானது. காந்தி அகிம்சை புரிந்ததால் சுசுதந்திரமது. திரேசா கருணை புரிந்ததால் அன்னையானார். கணவன் மனைவி புரிந்ததால் குடும்பமானது. நண்பர்கள் நட்பைப் புரிந்ததால் முகநூல் வளர்ந்தது. புத்தாண்டு மகிழ்வோடு வரவேற்போம். நாள்தோறும் இனிமையாக உணர்ந்திடுவோம்
ஆக்கம் குமுதினி ரமணன் யேர்மனி:
Keine Kommentare:
Kommentar veröffentlichen