உன் நினைவின்
உயிர்ப்பில்
என் ஜீவன்
உன் அன்பின்
தகிப்பில்.
என் உயிர் ஊசல்
உன் பேச்சின்
வீச்சில்
மனஉளைச்சல்.
உன் பிரிவின்
உணர்வில்
உயிர்தாக்கல்
உனக்காய் வேண்டும்
பந்தம்
என்ஜீவன்
உணராது போவது
மடமையின்
உயிர்நீத்தல்
உன் வலிதாங்கிய
இதயத்தடாகம்
இறப்பு
உயிர்பிரியா உடல்
உயிர்எழுதும் மடல்
உனக்கானது
மனமது மாயை
மாறிடும் வேளை.
மாறுமோ மனமே..!!
மறுதலிப்பின்
உச்சத்தில்
உடையும் இதயம்
ஆக்கம் கவிக்குயில் சிவரமணியின்
Keine Kommentare:
Kommentar veröffentlichen