சில மௌனம்
சிந்திக்க வைக்கும்
நிந்திக்க வைக்கும்
சில வணக்கம்
சிந்தைக்கு விருந்து.
சில சுணக்கம்
கலக்கத்தின் குறி
கவலையின் நிழல்.
சில சலனம்
சில சபலம்
சில கொதிப்பு
சில தவிப்பு...!
நீண்ட மௌனம்
பெரும் போராட்டம்
மனதை சிதைக்கும்
ஆயுதமில்லாத
அறுவைச் சிகிச்சை.
வலி அதிகம்
வாஞ்சை அதிகம்
வார்த்தைக்கு
பஞ்சம். தாகம்
தஞ்சம். கொஞ்சம்
கெஞ்சல். தமிழுக்கு
மஞ்சம். கவிதைக்கு
கருமூலம்.
இடரில்லா இனிமை
எழுத்துக்களே
மாமருந்து
மௌனப்பிரவாகம்
மனதுக்கு
மத்தாப்பு...!
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் தயாநி
Keine Kommentare:
Kommentar veröffentlichen