வைகறைப்பொழுதிலே வானத்தின் விடியல்
சொல்லிட முடியாத சுகமான பிரசவம்
மெல்லிட முடியாத மேகத்தின் அழகு
மேனியை சுகமாக்கும் சூரிய கதிர்கள்
வைகறைப்பொழுது வருகை
வானத்தின் வண்ணத்தால் புலர்வு
எண்ணிட முடியாத ஒளிக்கீற்றுகள்
என்றென்றும் பகலின் உயிர்த்துடிப்புகள்
வானத்தின் வண்ணத்தால் புலர்வு
எண்ணிட முடியாத ஒளிக்கீற்றுகள்
என்றென்றும் பகலின் உயிர்த்துடிப்புகள்
பகலின் வரவும் பார்ப்பேரரின் மகிழ்வும்
காலையின் உதயமும் காதலின் துளிர்ப்பும்
உயிரினத்தில் மகிழ்வும் உளமார அமைதியும்
உள்ளத்துள் உற்சாகமும் உணர்ந்திடும் பொழுது
காலையின் உதயமும் காதலின் துளிர்ப்பும்
உயிரினத்தில் மகிழ்வும் உளமார அமைதியும்
உள்ளத்துள் உற்சாகமும் உணர்ந்திடும் பொழுது
வைகறைப்பொழுது வளமான நற்பொழுது
அமைதியின் விடியலில் பூத்திடும் நற்பூக்கள்
அதிகாலைச்சூரியன் அணைத்திடும் வண்ணம்
ஆகாயதாமரையும் அழகாக பூத்திடும்
அமைதியின் விடியலில் பூத்திடும் நற்பூக்கள்
அதிகாலைச்சூரியன் அணைத்திடும் வண்ணம்
ஆகாயதாமரையும் அழகாக பூத்திடும்
ஆக்கம் கவிஞை
நகுலா சிவநாதனின்
Keine Kommentare:
Kommentar veröffentlichen