விண்வெளியில் பறக்கின்றேன்
விடிந்ததும் சந்திரமண்டலத்தில்
நானும் அல்லிராணியாக
நாளைய கனவுகளுடன்…//
மின்னும் நட்சத்திர மாளிகை
பொன்னால் அது சோபனை
எண்ணில் அடங்கா வைரங்கள்
எள்ளிநகையாடும் முத்துக்கள்
சேவகம் செய்வதற்காய்
தேவதைகள் எனை
தேனும் பாலும் உண்ணவைத்தனர்
இந்திரன் சந்திரன் ..
பட்டுக்கம்பள வரவேற்பு
ஆடல் பாடல் அலங்கரிப்பு
சாமரம் வீச சிம்மாசனம்
அன்னநடை நடந்தேனோ அவனோடு
சிம்மாசம் ஏறிஅமர சிறுநகையுடன்
பன்னீர் குளியலாம்
பஞ்சாமிர்தமே உணவாம்
மின்னும் நவரத்தின பளிங்குகட்டிலாம்
பள்ளிகொள்ள வைப்பதற்கு
பலமான ஏற்பாடாம்
கொட்டாவி விட்டவாறே
கட்டிலிலே வீழ்கிறேன்
கம்பிக் கட்டில் சத்தத்தில்
சட்டென விழிக்கிறேன்
ஐயகோ அத்தனையும் கனவுதானே
ஆனாலும் மகிழ்கிறேன்
அதை நான் எழுதுகிறேன்
அன்றொரு நாள் கனவுலகில்..//
அதுவும் ஒரு சுகம் ..//
கனவு கண்டது ஆக்கம் கவிக்குயில் சிவரமணி
Keine Kommentare:
Kommentar veröffentlichen