Social Icons

Mittwoch, 13. April 2016

கவிஞர் எழுத்தாளர் தயாநியின் நிகரில்லா வளம்...!















கரும் பனைகள்
பெரும் வரங்கள்.
உரமிட்டு காக்க
விரும்பிடாத போதும்
விரும்பியே எம்
கரம் பற்றிக் காக்கும்
கரும் பனைகளே
கரம் கூப்பி வணக்கம்.!
.
நிரந்தரம் எமக்கு
என்றுமே இல்லை
உமக்கோ சாகா
வரம். இது நிஜம்.
நேர்த்தி உறுதி
கனதியான காப்பரண்.
குண்டு மழைக்கும்
நச்சு புகைக்கும்
துவண்டு விழாது
எமக்கான எல்லைக்
காவல் தெய்வங்கள்..!
அரசை விஞ்சிய
ஆழுமை! வாக்கு
வங்காமலே காக்கும்
பெரும் தன்மை
வீட்டுக்கு வளையாய்
விழுந்துறங்க பாயாய்
வேலிக்கும் கூரைக்கும்
ஓலையாய் பெட்டியாய்
கடகமாய் விசிறியாய்
அடுப்பெரிக்க விறகாய்
இறுதி வரை தன்னை
தானம் செய்யும் உன்னை
வணங்குதல் ஒன்றே
நியாயம் நீயே
நிகரில்லா வளம்..!
கருப்பனியாய்
பனம் கட்டியாய்
பனம் கிழங்காய்
நொங்காய் பனம்
பழமாய் ஒடியலாய்
போதையூட்டும்
பனம் கள்ளாய்
பலவழிகளாலும்
தாயாய் நின்றுழைக்கும்
நீங்கள் இன்றி
எமக்கேது வாழ்வு.?
வீட்டுக்கொரு பனை
நடுவோம். நலன் பெறுவோம்...!


ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates