Social Icons

Dienstag, 12. April 2016

பா வானதி வேதா. இலங்காதிலகம்.எழுதிய சீர்திஉதவாத உறவுகள்.












வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
மரபு - புதுக்கவிதை
உதவாத உறவுகள்.
ஓட்ட ஒட்டிய உறவு
பட்டென விலகினால் துறவு.
சட்டென்று பிறகு உதவுவாரா!
விலகிடும் உதவாத உறுவுகளா!
பணம் பவிசு வந்து
மணம் குணம் மறந்து
கணமெனும் சுயநலம் பிறந்து
கனவாகியது உதவிய உறவுகள்.
மதம் மதமென்று நாளும்
கதம் (ஓட்டம்) கதமென தேடும்
விதமான மனிதர் எப்படி
உதவும் உறவாவார் எமக்கு!
கிட்டும் உறவிற்கு உதவும்
கட்டான பணம் பதவியும்
ஒட்டியிருந்தால் பலர் எமக்கு
உதவும் உறவாகிறார் நாளும்.
ஓட்டாண்டியாய் ஒன்றிற்கும் உதவாது
ஒரு செல்லாக் காசாக
எட்டாதிருந்தால் எம்மைப் பலர்
உதவாத உறவாக விலக்குவார்.
அன்பின்றி, அதிகாரமாய், தூரமாய்,
வன்மமாய், கோபமாய், முறைப்பாய்
இன்னல் கொண்ட மனிதர்
என்றும் உதவாத உறவுகளே!
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
vetha

1 Kommentar:

  1. மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரா தங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ததற்கு.

    AntwortenLöschen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates