நீர்த்திவலை அவள்.
நீர்த்துளிகளாய் அவள்
நினைவுகள் அள்ளி
நனைக்கிறது நினைவலைகள்.
குளிர் விடும் மனதில்
தளிர் விடும் ரோஜா பூப்
பாதம் பட்டு உயிர்
மலர்வது ஆச்சரியம்.
அள்ளிச்சிதறும் நீரின் ஓசை போல்
கலகலக்கும் சிரிப்பில்
துள்ளித் திரிகிறது மனது
சிறுபிள்ளை போல் ஒரு மயக்கம்.
ஆக்கம் குமுதினி ரமணன் யேர்மனி:
Keine Kommentare:
Kommentar veröffentlichen