தூக்கமின்றியும்
வாழ்ந்திடலாம்.
ஏக்கமுடன் வாழ்வது
ஏற்புடையதல்ல
ஏழைகளின் ஏக்கம்
கொடிது கொடிது!
அக்கம் பக்கம்
இல்லாதோர்
உள்ளங்கள்
உடையாமல்
உல்லாசப் பயணம்
போவோர்
தளிர்களின்
மனங்களில்
ஆசை எனும்
எக்கமதை விதைத்து
வேடிக்கை காட்டும்
நிலை மாற வேண்டும்...!
அனர்த்தங்களின்
அறுவடையால்
உயிரான உறவுகள்
உடமைகள் கனவுகள்
கற்பனைகள் குலைந்து
தாக்கத்தில் தள்ளாடும்
பிஞ்சுகளை எண்ணி
இயங்குதல் அவசியமானது..
கொடுக்கும் மனம்
வேண்டும்
இரக்கம் சுரத்தல்
சுகம் சேர்க்கும்
கலக்கம் தீர்க்கும்
கடமைகளை
உரிமையுடன்
உணர்வில் இருத்தி
இன்பம் சேர்த்திட
வேண்டுவோம்.
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் தயாநி
Keine Kommentare:
Kommentar veröffentlichen