சூட்டி வச்சேன் கொண்டையில செம்பருத்தி
சில்லுன்னு இருக்கே நீ தொட்டா என் பருத்தி
காத்திருக்க முடியலே எனை வருத்தி
காலம் கடத்தாமல் நீ வந்தா போடுவேன் சாமிக்கு நேர்த்தி..
சில்லுன்னு இருக்கே நீ தொட்டா என் பருத்தி
காத்திருக்க முடியலே எனை வருத்தி
காலம் கடத்தாமல் நீ வந்தா போடுவேன் சாமிக்கு நேர்த்தி..
பந்தி வச்சி விருந்து வைப்பேன் வா கண்ணா ..
பக்கத்துல நானிருப்பேன் உன் மொர பொண்ணா...
சிந்தையெல்லாம் உன் நெனப்புன்னு நான் சொன்னா...
சிட்டா நீ பறந்து வருவ பச்ச மண்ணா...
பக்கத்துல நானிருப்பேன் உன் மொர பொண்ணா...
சிந்தையெல்லாம் உன் நெனப்புன்னு நான் சொன்னா...
சிட்டா நீ பறந்து வருவ பச்ச மண்ணா...
ஆத்தோரம் உன் நினைப்பு கரையாக
காற்றாக எனைப் பார்க்க வா முறையாக
சேற்றோடு வாழ்ந்தாலும் கரைபடியாத் தாமர
செலவாக நான் வரவா மாமா நீ வாழும் வரை..
காற்றாக எனைப் பார்க்க வா முறையாக
சேற்றோடு வாழ்ந்தாலும் கரைபடியாத் தாமர
செலவாக நான் வரவா மாமா நீ வாழும் வரை..
எனக்காக வாழுற நீயெந்தன் பனிமழை
எடுப்பாரின்றி கிடக்கும் நான் உன் கைப்பிள்ளை
உனக்காக கோர்க்கிறேன் ஒர் பூமாலை
உயிரே நானுனக்கே மாப்பிள்ளை
எடுப்பாரின்றி கிடக்கும் நான் உன் கைப்பிள்ளை
உனக்காக கோர்க்கிறேன் ஒர் பூமாலை
உயிரே நானுனக்கே மாப்பிள்ளை
Keine Kommentare:
Kommentar veröffentlichen