Social Icons

Montag, 11. April 2016

பாடகர்,பாடலாசிரியர் பிரபாலினிக்கு நல் அறிமுகம்.

இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர், பாடகர்,பாடலாசிரியர் பிரபாலினிக்கு நல் அறிமுகம்.
துடுப்பாட்ட வீரன், காவியனின் கனவு மெய்ப்பட DELTAURA TRANSPORTATION, மற்றும் கனடா,நயினாதீவு Cricket Club ஆதரவுக்கரம் கொடுத்தமை பெருமை.
விளம்பரதாரர்கள் , தங்களை மேடையேற்ற வேண்டாம், இது எம் கடமை என்று கேட்டுக் கொண்டமை புல்லரிப்பு.
ஊடகவியலாளர்கள் சிலர் , அறிவிப்பின்றி வந்தது ஆனந்த ஆச்சரியம்.
எம் கலைஞர்கள் சிலருக்கு நேரம் கிடைக்காததால் கோபம் கொள்ளாது ஏற்றுக்கொண்டமை அவர்கள்பால் இன்னும் கூடியது மரியாதை.
சொல்ல வந்த விடயம் ஈடேறியதிலும்,
இது தான் நீங்கள் செய்கின்றீர்கள் என்று இன்று தான் தெரிந்தது.. வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு.. இது தான் காலத்தின் தேவையென்று ஒட்டுமொத்தமாக எல்லோரும் சொல்லிச் சென்றது நிறைவு.
இரத்த பந்தங்கள் சிலர், நண்பர்கள் சிலர் விழாவிற்கு வராதது எதிர்பார்த்ததே. பாவம் அவர்களுக்கு ஆயிரம் வேலை இருந்திருக்கும்.
நிறைவான கூட்டம். மனநிறைவான நிகழ்வு. சாரதித் தோழர்கள் மகிழ்ந்து சென்றார்கள் முக்கியமாக...
குறைகள், நிறைகள் தாண்டி.......
வெற்றியாய் முடிந்தது எல்லாம்.
இப்பதிவை இரவு 3 மணி வரை முழித்திருந்து ஒப்பேத்திய காமராக் கவிஞன் Ravi Atchuthan போற்றுதலுக்குரியவர்.
சாத்தியப் படுத்திய அனைவருக்கும்,
தலை தாழ்த்தி ஒரு சல்யூட். !!!!!

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates