Social Icons

Donnerstag, 14. April 2016

பா வானதி வேதா. இலங்காதிலகம்.எழுதிய இளவேனிலே வா!





















கசந்த பனிக்காலம் மறைந்து இனிய
வசந்தருது இதம் தரும் பசுமை
வசந்த காலம் இளவேனிலாம், சித்திரை
வரும் பின் வைகாசி வரை.
கனவுகள் பலவற்றின் திறவு கோல்.
கனதியாகும் வறுமை தழுவும் மக்களிற்கு
கலக்கும் அதிஷ்டத்தோடு நல்வரவாகட்டும்!
கந்தைத் துணி மாற்றும் புதுவருடமே!
புத்தாடை புதுப் பொங்கல் பலகாரம்
புத்திர செல்வங்கள் உறவுகளோடு நாம்
சித்தமினிக்கக் கொண்டாடும் சித்திரையே வருக!
சிறப்பகள் பல கொண்டு வருகவே!
முற்றத்தில் பொங்கல் சூரிய வழிபாடு
சுற்றங்களிடம் புதிதாகச் செல்லல், அவர்கள்
குற்றமின்றி எம்மிடம் வருகையென மாதம்
முற்றும் கலகலப்பு! கோலாகலச் சித்திரையே!
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
vetha

1 Kommentar:

  1. மிகுந்த மகிழ்ச்சி தங்கள் இணையத்தில் கவிதையை இடம் பெறச் செய்தமைக்கு.
    மனமார்ந்த நன்றிகள்.
    https://kovaikkavi.wordpress.com/

    AntwortenLöschen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates