வெயில் அடிக்கும் வேகத்திலே..!
தரை நரம்பு வெடிக்கிறது..
பசியோடும் தாகத்தோடும்
பல உயிர்கள் துடிக்கிறது..!
காற்றதுவோ கடமையினை
இடை நிறுத்தம் செய்கிறது..
புழுக்கம் வந்து தேகமெல்லாம்
பருக்கள் தூவிப் போகிறது..!
பார்க்கின்ற இடங்களெங்கும்
கானல் நீராய் தெரிகிறது..
அனல் கலந்து காற்று வீச
நிழல்கள் கூடச் சாகிறது..!
கால் நடைகள் நாவறண்டு
தாகம் தீர்க்க அலைகிறது
தரையதுவோ மீதமின்றி
தண்ணீர் யாவும் குடிக்கிறது..!
குளங்களும் ஆறுகளும்
குற்றுயிராய் கிடக்கிறது..
பசுமையான இடங்காளெல்லாம்
பொசுங்கிப் போய் தெரிகிறது..!
சூரியனைக் கண்டு மழை
தூரம் ஓடி ஒழிக்கிறது..
வெண் மேகம் கூடினின்று
வரும் மழையைத் தடுக்கிறது..!
இன்னும் ஊன்றி வெயிலடித்து
இத்தரணி இறக்குமுன்னே..!
இறைவா உந்தன் அருளதனை
இறக்கிவிடு அவனியிலே..!
Keine Kommentare:
Kommentar veröffentlichen