அச்சச்சோ தள்ளி நில்லு
வெள்ளிக்கிழமை விரதமாச்சு
வாசல் தெளித்து கோலம் போட
வழிவிட்டு நீயும் செல்லு...
பட்டாம் பூச்சிபோலநீ
சுத்தி சுத்தி வராதே
சத்தம் போட்டு திட்டமுன்
ஒதுங்கி கொஞ்சம் நில்லு...
சமையல்கட்டில் உதவிஎன
சாதுரியம் செய்யாதே
உன் எண்ணம் புரியுமெனக்கு
கன்னம் கிள்ளி போகாதே....
வானம் வெளுத்திருக்கு
புதுப்பொழுது புலர்ந்திருக்கு
பானம் நீ பருகு
பாணம் கண்ணில் எதற்கு.
...
ஆக்கம் கவிஞை ரதி மோகன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen