கற்பனைகளை காவியமாக்க நினைத்தேன்
ஆனால் அவை வெறும் கனவுகள் தான்
என்று கண்ட பொழுது
கதைகளில் கண்ட சுவை
நிஜத்தில் நிலைக்கவில்லை
என்று கண்ட பொழுது
கதைகளில் கண்ட சுவை
நிஜத்தில் நிலைக்கவில்லை
நிகழ்வுகள் நிலையில்லை
நிலையாமைக்கும் முடிவு உண்டு
தீர்மானங்கள் திணிக்கபட்டால்
திமிறி மருகுவதில் நியாயமில்லை
நிலையாமைக்கும் முடிவு உண்டு
தீர்மானங்கள் திணிக்கபட்டால்
திமிறி மருகுவதில் நியாயமில்லை
அநியாயங்கள் ஆட்சி செய்யும் போது
அதர்மத்தை எதிர்ப்பது தர்மம் ஆகும்
மனசாட்சி வழிகாட்டியாக
மாற்றம் தேடுவதில் பிழையில்லை
அதர்மத்தை எதிர்ப்பது தர்மம் ஆகும்
மனசாட்சி வழிகாட்டியாக
மாற்றம் தேடுவதில் பிழையில்லை
நம்பிக்கையை நாளையில் வைப்பேன்
நடப்பது இனி நல்லவையாகும் என்று நினைப்பேன்
நேற்று வாழ்ந்த வாழ்வு பயனின்று போகவே
நேர்மையில் குறை காண்பது மகா துன்பமே
நடப்பது இனி நல்லவையாகும் என்று நினைப்பேன்
நேற்று வாழ்ந்த வாழ்வு பயனின்று போகவே
நேர்மையில் குறை காண்பது மகா துன்பமே
சாதகம் பார்த்த வரனில்
சாத்தியம் உடைந்து தான் விட்டது
சரித்திரத்தில் இனி எனக்கும் இடம் உண்டு
சாதிப்பேன் நான் நல் வழிப்பெண்ணாக
சாத்தியம் உடைந்து தான் விட்டது
சரித்திரத்தில் இனி எனக்கும் இடம் உண்டு
சாதிப்பேன் நான் நல் வழிப்பெண்ணாக
ஆக்கம் மீரா குகன் ஜெர்மனி
Keine Kommentare:
Kommentar veröffentlichen