Social Icons

Freitag, 8. April 2016

பூ. சுகிரதன் எழுதிய"ஏழையின் காதல்"















மறக்க முடியவில்லை
உன்னை என்றாய்
இன்பமோ 
துன்பமோ
உன்னுடன்தான்
வாழ்கையென்றாய்.......

பகிர்ந்து கொண்ட
அன்பையும்
பழகிய நிமிடங்களையும்
எப்படி மறந்தாய் ?
ஆசைவார்த்தை
ஊட்டி ஏன் மோசம்
செய்தாய் என்னை ?
இறக்கமற்றவள்
இதயமில்லாதவள்
பணம் பார்த்து
மணம் செய்து கொண்டாயா ?
பயணம் கூட சொல்லவில்லை
பறந்து சென்றாய் வெளிநாடு
ஏழையிவன் மீண்டும்
ஏழையானேன்
உன்னை இழந்து நின்றபோது.....
.
சொல்வதற்கு
வார்த்தைகள்
ஏதுமில்லை
அழுவதற்கு
கண்ணீரும் மிச்சமில்லை
உன்னால் கைவிடப்பட்ட
ஏழையிவன் காதல்மட்டும்
எப்போதும்
நிலைத்திருக்கும்
உன் நினைவுகளோடு.....
..
ஆக்கம் பூ.சுகி



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates