கடல் கடந்து போன என் மக..
கரை சேர்க்க போனாயோ எங்கள
வெளிநாடு போனது நீ குறையில்ல
வெறுப்பாக வாழுறேன் இங்க நா புள்ள
நான் வரைந்த சித்திரம் நீ வெளியிலே
நாளும் நாங்க அவதி படுறோம் உன் பிரிவுல
கேளடி கண்ணே ஒரு மொழியில
கேவளமாச்சி ஏழை வாழ்வு உலகில
மகராசி உன் வாழ்க்கையிலே- நீ
மண்ணள்ளி போட்டுவிட்டாய் கேக்கவில்ல
மனசால நினைச்சவனும் மறந்துவிட்டான்
மக ரெண்ட பெத்து நீயும் பறந்து விட்டா
பால் குடி மறக்கா பிள்ளை- தினம்
பலமுறை நினைக்காள் உன்னை
பணிவிடை செய்றா மகளே அங்க
பணமே வாழ்க்கையாச்சி இங்க
பெத்த வயிறு பத்துதடி மகளே -உன்னை
பத்துமாசம் சுமந்து பெத்தவடி நானே-நான்
ஒத்த நொடி பிரிந்ததில்லை உன் மகள
சுத்தமா மறந்திடாதே நீ எங்கள
உன் பிள்ளைகள் படிப்பு பெரும்பாடு
உன் பிள்ளைக்கு உடுப்பு சாப்பாடு
நீ அனுப்பும் பணமும் இங்கு போதாது
அடுப்படியில் தினமும் மகளே தகராறு
வீட்டுக்கு உன் புருஷன் வந்து நெடுநாளு
குடிச்சா மட்டுமே வீட்டுக்கு வருவாரு
விடிஞ்சா போதும் அவர் அவதூறு
இது தான் இங்கே வாழ்க்கை மகளாரு
Keine Kommentare:
Kommentar veröffentlichen