Social Icons

Mittwoch, 20. April 2016

கவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்

ல்லையே வாழ்வென கழித்திருப்பான்

எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான்
நாளை என்பதை மறந்திருப்பான்
நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திருப்பான்

இல்லம் ,பிள்ளைகளெல்லாம் தியாகம் செய்வான்
இன்பம் ஒன்றே இராணுவம் என்பான்
தாய் மண்ணே வணக்கமென்பான்
தன் வாழ்க்கை தரணிகென்பான்

நல்லது கெட்டதையவன் தெளிந்திருப்பான்
நாளொரு புதுப்பாடம் கற்றிருப்பான்
சொல்லிலும் சுயநலம் அற்றிருப்பான்
சொப்பனங் கண்டே வாழ்ந்திருப்பான்

கள்வர்களை அழிக்க கொதித்தெழுவான்
களத்தில் இறங்கி போர்புரிவான்
கருணை மனம் கொண்டவன்
கன்னியம் காக்கவும் தவறமாட்டான்

சொல்லிலே உண்மை வீரம் கொள்வான்
உள்நாட்டைக் காக்க உதிரம் துள்ளுவான்
கடமையென்று தன்னை இழக்கச் செல்வான்
கண்ணிமை போல் நாட்டை காத்து வெல்வான்


ஆக்கம்
கவித்தென்றல் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates