அந்த வசந்தகாலம் வளமாய் வந்தது
சுகந்தம் தந்தது சுமைகள் குறைந்தது
இன்பம் துளிர்த்தது இயற்கை மலர்ந்தது
துன்பம் பறந்தது துயரம் விலகியது
புத்தம் புதிய காலை உதயம்
பூக்கள் யாவும் விரிவின் விழிம்பில்
பாக்கள் புனையும் பாவலன் வனைவும்
நாட்கள் செல்ல நன்றாய் துளிர்க்கும்
வசந்தம் வந்தால் வாழ்வு செழிக்கும்
வளரம் மரங்கள் இதழ்கள் விரிக்கும்
மொட்டும் மலரும் இலையும் துளிர்க்கும்
மோனை இல்லா முகாரி இசைக்கும்
வண்டும் வரும் வகையாய் பூவும் விரியும்
கன்றும் பிறக்கும் களிப்போடு பாலும் சொரியும்
திருவிழாவும் வரும் திருப்பணியும் தொடரும்
பெருவிழாவாய் இளவேனில் பெயர்சொல்ல வசந்தம் வரும்
வசந்தத்தின் துளிர்ப்பில் வாழ்க்கையும் மலரும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen