அன்பு வழியும் வாழ்வு வாழ்ந்தால்
என்றும் கண்ணில் நீர் வழியாது.
உன் கண்ணில் நீர் வழிந்தால்..
என்ற எண்ணமும் என்றும் தோன்றாது.
சாதகமான (positiv) சிந்தனைக் கதிரின் பிரதிபலிப்பு
சாதகமான வாழ்வே ஏது மறுப்பு!
பாதகமான (Nagativ) எண்ணப் பாதிப்பின் விரிப்பு
பாதகம் கொண்ட கண்ணீர்த் தரிப்பு.
எண்ணத்து நலங்களின் எழிலான பெருக்கம்
கண்கள் விரித்துக் காந்தம் பெருக்கும்.
திண்ணமாய் மனதின் சக்தி விரியும்.
வண்ணங்கள் நிறைந்து வளங்கள் பெருகும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen